ஸ்டோக்ஸ் கடுமையாக தாக்க முயற்சித்தார்: நான் ரசித்தேன்..முதல் அரைசதமடித்த சாய் சுதர்ஸன்
இங்கிலாந்துக்கு எதிராக அவர்களின் சொந்த மண்ணில் விளையாடும்போது, ஆக்ரோஷமான தன்மைக்கு தயாராக இருக்க வேண்டும் என சாய் சுதர்ஸன் தெரிவித்தார்.
சாய் சுதர்ஸன்
ஓல்ட் டிராஃப்போர்டு டெஸ்டில் தமிழக வீரர் சாய் சுதர்ஸன் (Sai Sudharsan) தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
அவர் 151 பந்துகளில் 7 பவுண்டரிகளை விரட்டி 61 ஓட்டங்கள் எடுத்து ஸ்டோக்ஸ் ஓவரில் ஆட்டமிழந்தார்.
ஆட்டநேர முடிவுக்கு பின் பேசிய சாய் சுதர்ஸன் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவது குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "இது உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். ஏனென்றால் நாட்டின் சிறந்த பந்து வீச்சாளர் (ஸ்டோக்ஸ்) வேகமாக வந்து கடுமையாக தாக்க முயற்சிக்கிறார். அங்கு துடுப்பாட்டம் செய்து அணிக்காக முடிந்ததை செய்தேன்.
அதுதான் நமக்கு ஏற்படக்கூடிய சிறந்த உணர்வுகளில் ஒன்றாகும். நிச்சயமாக, இங்கிலாந்துக்கு எதிராக அவர்களின் சொந்த மண்ணில் விளையாடும்போது, நிச்சயமாக நீங்கள் அந்த ஆக்ரோஷமான தன்மைக்கு தயாராக இருக்க வேண்டும். அதனால்தான் நான் அதை மிகவும் ரசித்தேன்" என்றார்.
பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) தனது நேர்கோட்டுப் பந்துவீச்சாலும் (straight lines), ஷார்ட் பிட்ச் பந்துவீச்சாலும் (Short-Pitched) சாய் சுதர்ஸனுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |