விலாங்கு மீனை ஆசனவாயில் நுழைத்த நபர்: எதற்காக தெரியுமா? அதிர்ச்சி சம்பவம்
சீனாவில் மலச்சிக்கலை போக்க சுமார் 20 செ.மீ நீளமுள்ள விலாங்கு மீனை நபர் ஒருவர் ஆசனவாய்க்குள் நுழைத்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
சீனாவின் Jiangsu மாகாணத்தில் உள்ள Xinghuaவில் வசித்து வந்த நபர் ஒருவர் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் குடலின் இயக்கத்தை சீரமைக்க, சுமார் 20 செமீ நீளமுள்ள விலாங்கு மீனை ஆசனவாய்க்குள் நுழைத்துள்ளார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக மீன் அவரது அடிவயிற்று பகுதிக்குள் நுழைந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட வலியை தாங்க முடியாததால் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபரின் வினோத செயலை கண்டு அதிர்ச்சியில் மூழ்கினர்.
இதை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அவரது அடிவயிற்றில் உள்ள விலாங்கு மீனை அகற்றியுள்ளனர், அப்போது அந்த மீன் உயிருடன் இருந்தாக தெரிகிறது.
அதுமட்டுமின்றி சிறுது தாமதம் ஆகி இருந்தால் அவரின் உயிருக்கே ஆபத்தாக மாறியிருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.