என்னை மனிதனாக மாற்றிய அனைவருக்கும் நன்றி! இரண்டு உலகக்கோப்பைகளை வென்ற கேப்டன்.. அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இயான் மோர்கன்
கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மோர்கன் அறிவித்தார். அதன் பின்னர் ஒரு சில லீக் தொடர்களில் விளையாடி வந்தார்.
இதனால் அவர் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு அறிக்கை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிட முடிந்தது. மேலும் எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய முடியும் என்று எதிர்பார்த்தேன். இதைக் கூறினால் தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடும் சாகசத்தையும், சவால்களையும் நான் சந்தேகத்திற்கு இடமின்றி இழக்கிறேன்.
@REUTERS
எனினும், நான் இன்னும் விளையாட்டில் ஈடுபடுவேன். சர்வதேச மற்றும் உரிமையாளர் போட்டிகளில் ஒளிபரப்பாளர்களுடன் வர்ணனையாளர் மற்றும் Pundit ஆக பணியேற்றுவேன். எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நான் உண்மையாக எதிர்நோக்குகிறேன்.
எனக்கு நிபந்தனையின்றி ஆதரவளித்த எனது மனைவி, தாரா, எனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு நான் குறிப்பாக நன்றி கூற விரும்புகிறேன். என்னை ஒரு வீரராக மாற்றியது மட்டுமல்லாமல், என்னை இன்றைய மனிதனாக மாற்றிய எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் மற்றும் திரைக்கு பின்னால் இருந்த அனைவருக்கும் நன்றி கூற வேண்டும்.
கிரிக்கெட்டிக்கு நன்றி, என்னால் உலகம் முழுவதும் பயணம் செய்து நம்ப முடியாத மனிதர்களை சந்திக்க முடிந்தது. அவர்களில் பலருடன் நான் வாழ்நாள் நட்பை வளர்த்துக் கொண்டேன். உலகெங்கிலும் உள்ள Franchise அணிகளுக்காக விளையாடுவது எனக்கு பல நினைவுகளை அளித்துள்ளது. நான் அதை என்றென்றும் வைத்திருக்க முடியும்' என தெரிவித்துள்ளார்.
— Eoin Morgan (@Eoin16) February 13, 2023
இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. 36 வயதாகும் மோர்கன் 248 ஒருநாள் போட்டிகளில் 7,701 ஓட்டங்களையும், 115 டி20 போட்டிகளில் 2,458 ஓட்டங்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@Getty Images
Icc-Cricket.com