உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த 4 அணிகள் தான் செல்லும்: அடித்து கூறும் முன்னாள் கேப்டன்
ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் கணித்துள்ளார்.
50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் திகதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இவற்றில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்து பல முன்னாள் வீரர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Getty Images
இயான் மோர்கன் கணிப்பு
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இயான் மோர்கன் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'இந்த தொடரின் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து ஒரு அணியாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல் இந்தியாவும் அங்கே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இவைகளை தவிர்த்து அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் கோப்பையை வெல்வதற்கான திறமையை கொண்டுள்ளன.
எனவே, இந்த மிகப்பெரிய போட்டி நிறைந்த தொடரில் நான் குறிப்பிட்ட முதல் இரண்டு அணிகள் கோப்பையை வெல்வதற்கு வலுவான அணிகளாகவும், எஞ்சிய 2 அணிகள் சவாலை கொடுக்கும் அணிகளாகவும் இருக்கும்' என தெரிவித்துள்ளார்.
(Martin Ricket/PA) (PA Archive)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |