EPFO: அவசர மருத்துவ செலவுக்கு ஒரு மணி நேரத்தில் ரூ.1 லட்சம் எடுக்கலாம்! எப்படி?
PF சந்தாதார்கள் தங்களது அவசர மருத்துவச் செலவுகளுக்காக ஒரு மணி நேரத்தில் ரூ.1 லட்சம் வரையில் எடுக்கலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு அவசர காலங்களில் மருத்துவச் செலவுகளுக்கு ரூ.1 லட்சம் முன்பணத்தை (advance) எடுக்க அனுமதிக்கிறது.
ஜூன் 1-ஆம் தேதி, EPFO ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட எந்தவொரு உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும் சிகிச்சையளிக்க திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அட்வான்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும், மருத்துவ அவசரநிலைக்கு ஈபிஎஃப் கணக்கிலிருந்து அட்வான்ஸ் எடுக்க ஈபிஎஃப்ஓ அனுமதித்திருந்தது. ஆனால், அதற்கு உரிய மருத்துவச் செலவினங்களின் மதிப்பீட்டை வழங்க வேண்டியிருந்தது. இதனால், இந்த தொகை செலவு மதிப்பீடுகளின் அடிப்படையில் அல்லது மருத்துவ பில்களை சமர்ப்பித்த பின்னரே கைக்கு கிடைத்தது.
ஆனால் இப்போது அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய சேவை அப்படி அல்ல. இதற்காக நீங்கள் மருத்துவமனையில் சேரும் செலவு குறித்த மதிப்பீட்டை பிஎஃப் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
விண்ணப்பித்த ஒரு மணி நேரத்தில் அட்வான்ஸ் தொகை உங்கள் பேங்க் அக்கவுண்டுக்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது.
அவசர மருத்துவச் செலவுகளுக்காக பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி?
1, பிஎஃப் அமைப்பின் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற முகவரியில் செல்ல வேண்டும்.
2, பிஎஃப் நம்பர், பாஸ்வர்டு மற்றும் கேப்ட்சா விவரங்களைப் பதிவிட்டு உள்நுழையவும்.
3, 'Online Services' என்ற மெனு பாரில் சென்று ‘Claim (Form-31, 19, 10C & 10D)' வசதியை கிளிக் செய்யவும்.
4, புதிதாக ஓப்பன் ஆகும் பக்கத்தில் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களைச் சரிபார்க்கவும்.
5, விவரங்களைச் சரிபார்த்த பின்னர் பிஎஃப் அமைப்பின் டேர்ம்ஸ் & கண்டிசன்களை ஏற்கவும்.
6, பின்னர் ‘Proceed For Online Claim' என்பதை கிளிக் செய்து ‘Medical emergency’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
7, சில விதிமுறைகளுக்கு உட்பட்ட நீங்கள் கிளைம் செய்த தொகை உடனடியாக உங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
அவசர காலங்களில் ஈபிஎஃப் உறுப்பினர்கள் இந்த அட்வான்ஸ் பணத்தை என்பதற்கான சில வழிகாட்டுதல்கள் உள்ளன:
1. நோயாளியை சிகிச்சைக்காக அரசு / பொதுத்துறை பிரிவு / C.G.H.S குழு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். அவசரகாலத்தில் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், ஒரு அதிகாரி விசாரித்த பின்னரே அட்வான்ஸ் பணம் வழங்கப்படும்.
2. EPFO உறுப்பினர் அல்லது அவரது குடும்பத்தினர் யாரேனும் மருத்துவமனை மற்றும் நோயாளியின் விவரங்களைக் கொடுக்கும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதில் செலவு குறித்த மதிப்பீடும் செய்ய முடியவில்லை என்று குறிப்பிடவேண்டும்.