இனி வாட்ஸ்அப் மூலம் PF பேலன்ஸ் பார்க்கலாம்; எப்படி பார்ப்பது?
epfo launch whatsapp service to know pf balance: PF பயனர்கள் வாட்ஸ்அப் மூலமாகவே பேலன்ஸ் பார்க்கும் வசதியை EPFO அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் மூலம் PF பேலன்ஸ்
EPFOவின் 74வது நிறுவன நாள் கொண்டாட்டங்களின் போது, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வாட்ஸ்அப் மூலம் PF விவரங்களை பெறும் அம்சத்தை தொடங்கி வைத்தார்.

இனி PF பயனர்கள் தங்களது இருப்புதொகையை சரிபார்க்க செயலி மற்றும் இணையதளத்திற்குதான் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.
உங்களது PF கணக்குடன் இணைக்கப்பட்ட எண்ணிலிருந்து, 8796441800 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் Hi அனுப்பினால் விருப்பமான மொழியை தேர்ந்தெடுக்க கேட்கும்.

அதன் பின்னர் இருப்புத்தொகை அறிவது, கடைசி 5 பரிவர்த்தனை விவரங்களை அறிந்து கொள்வது மற்றும் பாஸ்புக் தகவல்களை அணுகுவது உள்ளிட்ட 3 விருப்பங்கள் காட்டும்.

தேவையானதை தேர்வு செய்து தகவல்களைபெற முடியும். மேலும், ரூ.1,000 வரையிலான நிலுவைத் தொகையைக் கொண்ட, தகுதியுள்ள செயல்படாத கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க இனி தனியாக கோரிக்கை படிவத்தை நிரப்பத் தேவையில்லை.
EPFO Services on WhatsApp Launched! 💬 Check your EPF Balance, view your last 5 transactions and download your Passbook with just a WhatsApp message. 📲 Scan the QR Code or say Hi at +91 8796441800. #EPFO #WhatsAppServices https://t.co/AqxDzFJr6E
— EPFO (@officialepfo) November 1, 2026
பரிந்துரைக்கப்பட்ட அடையாளம் மற்றும் வங்கிக் கணக்குச் சரிபார்ப்பிற்குப் பிறகு, பணப் பரிமாற்றம் தொடங்கப்பட்டு, தானியங்கியாகவே உரிய பயனாளிகளுக்குப் பணம் செலுத்தப்படும். ஆதார் சரிபார்க்கப்பட்ட அடையாளங்களைக் கொண்ட கணக்குகளுக்கு இந்த வசதி பொருந்தும்.