EPFO: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி- முழு விவரம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) என்பது தொழிலாளர்கள் அவர்கள் ஓய்வுக் காலத்தில் பயனளிக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
இந்தியாவில் இந்த EPFO திட்டம் 1952 முதல் தொடங்கப்பட்டது. 1971 முதல் ஓய்வூதியத் திட்டத்தையும் இதனோடு சேர்த்து இந்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது .
இந்த EPFO திட்டத்தை தொழிலாளர்களின் நீண்ட காலம் சேமிப்பு திட்டம் என்றும் கூறலாம்.
இந்த திட்டத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகை வட்டியுடன் அளிக்கப்படுகின்றது.
இந்த வருங்கால வைப்பு தொகை, தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து சேமிக்கப்பட்டு, பின் அவர்களின் ஓய்வு காலத்தில் வட்டியுடன் அளிக்கப்படுகிறது.
வருங்கால வைப்பு நிதி விதிகள்
EPFO அமைப்பின் சேவைகள் மற்றும் திட்டங்களில் சேர வேண்டும் என்றால், ஒரு ஊழியர் குறைந்த பட்சம் ரூ.15,000 சம்பளத்தை பெற வேண்டும்.
இந்த சேவைகள் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.
இந்த EPFO தொகையை அந்த நிறுவனமே முடிவு செய்து கொள்ளலாம். எல்லா நிறுவனமும் ஒரே மாதிரியான EPFO தொகையை வழங்குவதில்லை.
திட்ட விவரம்
ஊழியர்களின் அடிப்படை சம்பளம்(Basic Salary), அகவிலைப்படியில்(Allowances) 12% தொழிலாளர் சேமநல நிதியாகப் பிடிக்கப்படும்.
தனியார் நிறுவனங்களில் பணியாளரிடமிருந்து பிடிக்கப்படும் அதே அளவு தொகையை நிறுவனமும் வழங்கும்.
இது தவிர, பணியாளர் விருப்பப்பட்டால் இன்னொரு 12% தொகையை கூடுதலாக தொழிலாளர் சேமநல நிதி கணக்கில் பிடிக்கச் சொல்லலாம்.
ஆனால், இந்த தொகைக்கு இணையாக நிறுவனம் எந்தத் தொகையும் செலுத்தாது.
தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33% தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும்.
ஊழியர்களின் பங்கான 12%, தொழில் நிறுவனத்தின் பங்கான 3.5% (ஓய்வூதியத்துக்குக் கழித்தது போக) ஊழியர்களின் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இந்தத் தொகைக்கு தற்போது 8.65% வட்டி தரப்படுகிறது.
இன்றைய தேதியில் ரூ.6,500 வரையில் சம்பளம் வாங்குபவர்களுக்கு தொழிலாளர் சேமநல நிதிப் பிடித்தம் கட்டாயம் பிடிக்க வேண்டும் என்பது சட்டம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |