செந்தில் பாலாஜி மட்டும் வாக்குமூலம் அளித்தால்... இபிஎஸ் பரபரப்பு பேச்சு
செந்தில் பாலாஜி மட்டும் பொலிசிடம் வாக்குமூலம் அளித்தால் பலர் சிக்குவார்கள் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தின் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட பகுதிகளில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், அதிமுக கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ரத்து செய்கிறது, இது அக்கட்சியின் சாதனை.
மின் கட்டணம் மட்டுமே 52 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது, இதனால் கைத்தறி, விசைத்தறி உட்பட பல தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.
தமிழகத்தையே காப்பாற்ற முடியாத முதல்வர், பீகார் சென்று பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யப் போகிறாராம்.
நான் முதலமைச்சராக இருந்த போது உங்கள் மீது வழக்கு போட்டிருக்க முடியும், ஆனால் என்னுடைய எண்ணம் எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே.
4 ஆண்டுகள் மக்களுக்காக ஆட்சி செய்தோம், கைதான அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
அவர் மட்டும் வாக்குமூலம் அளித்தால் பலர் சிக்குவார்கள் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |