அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கிய இபிஎஸ் - செங்கோட்டையன் சொன்ன பதில்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
செங்கோட்டையன் நீக்கம்
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வந்தது.

2 மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில், "கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை 10 நாட்களில் மீண்டும் கட்சியில் சேர்த்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும். 10 நாட்களில் கட்சியில் இணைக்காவிட்டால், ஒத்த கருத்து உடையவர்களை ஒருங்கிணைத்து அதற்கான முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என பேசினார்.
இதன் காரணமாக செங்கோட்டையனை அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியில் இருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.
இதன் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சியே என செங்கோட்டையன் தெரிவித்தார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு pic.twitter.com/dAA4SO2WrC
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) October 31, 2025
இந்நிலையில் செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நீக்கம் குறித்து செங்கோட்டையனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, இது குறித்து நாளை விரிவாக விளக்கம் அளிக்கிறேன். 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறேன் என தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன் நீக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        