தவெகவை கூட்டணியில் இழுக்க முயலும் அதிமுக - யாருக்கு சாதகம்? விரிவான காணொளி
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் மற்றும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
தவெகவை கூட்டணியில் இழுக்க முயலும் அதிமுக
2026 சட்டமன்ற தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, பிரச்சாரத்தை தொடங்கிய தவெக தலைவர் விஜய்க்கு கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க செல்லாதது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.
அதேவேளையில், இதனை பயன்படுத்தி விஜய்யை தங்கள் கூட்டணிக்கு இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கூட்டத்தில் இருந்தவர்கள் தவெக கொடியை அசைக்க, அதைப்பார்த்த எடப்பாடி பழனிசாமி, "இதோ பாருங்கள், கொடி பறக்கிறது, பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள்" என பேசினார்.
தவெகவின் தவெகவை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிப்பதாகவும், தவெகவின் முக்கிய நிர்வாகிகளே கூட்டணி செல்ல விரும்புவதாகவும், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மட்டுமே விஜய் தனியாக போட்டியிட வேண்டும் என்ற முடிவில் உள்ளதாகவும், மேலும் பல்வேறு விடயங்களை பகிர்ந்துள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |