கனடா அரசியலில் பெண்கள்! அமைச்சராக உள்ள தமிழ்ப்பெண் அனிதா பெருமிதத்துடன் வெளியிட்ட புகைப்படம்
கனடாவில் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகி 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் அது ஒரு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
கனடாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக Agnes Macphail என்பவர் கடந்த 1921ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இது நடந்து 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதை Equal Voice என்ற அமைப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியாக நேற்று ஒட்டாவாவில் நடத்தியது.
Equal Voice என்பது கனடாவில் ஆண்களுக்கு சரி சமமாக பெண்களும் அரசியலிலும், பதவியிலும் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட அமைப்பாகும்.
Canada needs more women and gender-diverse leaders in our politics. Since 2001, @EqualVoiceCA has worked hard to advocate for and enable equal representation in our Parliament, provincial and territorial legislatures, and city halls across the country. #100OnTheHill pic.twitter.com/3FULYJLcE6
— Anita Anand (@AnitaAnandMP) December 8, 2021
இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண் அனிதா ஆனந்த கலந்து கொண்டார்.
இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், கனடா அரசியலுக்கு அதிகமான பெண்கள் மற்றும் பன்முகத்தலைவர்கள் தேவை.
2001 முதல் EqualVoiceCA நாடு முழுவதும் உள்ள நமது நாடாளுமன்றம், மாகாண மற்றும் பிராந்திய சட்டமன்றங்கள் மற்றும் நகர அரங்குகளில் சமமான பிரதிநிதித்துவத்திற்காக வாதிடவும், செயல்படுத்தவும் கடுமையாக உழைத்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.