47 பந்துகளில் சதம்.. பறந்த சிக்ஸர்கள்! டி20யில் மிரட்டிய இளம் வீரர்
உகாண்டா அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபியா அணி வீரர் எராஸ்மஸ் 47 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார்.
நமீபியா-உகாண்டா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நமீபியாவின் விண்ட்ஹோக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் குவித்தது.
அணித்தலைவர் கெர்ஹார்ட் எராஸ்மஸ் 47 பந்துகளில் 100 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார். அதில் 7 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் அதிவேகமாக சதம் விளாசிய இரண்டாவது நமீபிய வீரர் என்ற சாதனையை எராஸ்மஸ் படைத்துள்ளார். முன்னதாக கோட்ஸே இந்த சாதனையை செய்திருந்தார்.
உலகளவில் அதிவேக டி20 சதம் விளாசியவர்கள் பட்டியலில் 16வது இடத்தை எராஸ்மஸ் பிடித்துள்ளார். 26 வயதாகும் எராஸ்மஸிர்கு இது முதல் டி20 சதம் என்பது குறிப்பிடத்தக்கது.