சிம்மம் செல்லும் புதன்! அடுத்த 2 வாரம் பிரச்சினைகள் மேல் பிரச்சினைகளை சந்திக்கபோகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்

horoscope
By Kishanthini Aug 09, 2021 10:10 AM GMT
Report

புதன் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அதிகாலை 1.23 மணிக்கு கடக ராசியில் இருந்து, சிம்ம ராசிக்கு இடம் பெயர்கிறது. இந்த ராசியில் இருந்து கன்னி ராசிக்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை 11.08 மணிக்கு செல்லவிருக்கிறது.

இப்போது சிம்ம ராசிக்கு செல்லும் புதனால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெற போகிறார்கள் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.  

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இந்த காலத்தில் நீங்கள் உங்கள் முயற்சிகளில் ஆர்வமாக இருப்பீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த காலம் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் தங்களை மேம்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

விடாமுயற்சியுடன் மேற்கொள்ளும் பணி அவர்களின் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். இக்காலத்தில் பதவி உயர்வு பெறலாம். மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

காதலிப்பவர்கள், தங்கள் துணையுடன் சில தவறான புரிதல்களை சந்திக்க நேரிடும். அவர்களுடன் நேரத்தை செலவிட்டு, சிறந்த புரிதலை உருவாக்க முயற்சியுங்கள். இக்காலத்தில் சிறந்த பேச்சால் புதிய நபர்களுடன் பழகி, நிறைய நண்பர்களை உருவாக்குவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் உறுதியுடன் இருப்பீர்கள். உங்கள் பேச்சு சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இது சாதகமான காலம்.

இக்காலத்தில் கற்றல் திறன் சூப்பராக இருக்கும். எதையும் விரைவாக புரிந்து கொள்வதோடு, மனப்பாடம் செய்வீர்கள். குடும்ப சூழல் நன்றாக இருக்கும். இக்காலத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுபீர்கள். காதலிப்பவர்கள், இக்காலத்தில் தங்கள் குடும்பத்தினரிடம் காதலிப்பவரை அறிமுகப்படுத்தக்கூடும்.

கல்வித் துறை, விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் அல்லது இராஜதந்திரிகளாக வேலை செய்பவர்களுக்கு நல்ல காலம். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் தாயுடன் மிகவும் இணைந்திருப்பீர்கள், உங்கள் உறவு செழிக்கும்.

மிதுனம்

புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். இதற்காக உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபடுவீர்கள்.

சமூகத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நண்பர்களுடன் சிறு பயணங்களை மேற்கொண்டு புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். உடன்பிறப்புகளுடனான உறவு வலுவாக இருக்கும்.

உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் அவர்களிடம் இருந்து ஆதரவைப் பெறலாம். இக்காலத்தில் உங்கள் சகோதர சகோதரிகளிடம் பாசமாக இருப்பீர்கள். அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல காலம் இது. விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு சாதகமான நேரம்.

பணிபுரிபவர்களுக்கு இந்த நேரத்தில் இடமாற்றம் கிடைக்கலாம். வணிகர்கள் நல்ல பொது உறவுகளை உருவாக்குவதற்கும் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவதற்கும் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மின் கேஜெட்களுக்காக செலவிடுவீர்கள்.

உங்கள் குடும்பத்துடன் ஒரு அன்பான உறவை அனுபவிப்பீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் சில தொண்டை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, உங்களை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். மாணவர்களுக்கு சாதகமான நேரம் இது. பல பாடங்களில் அதிக அறிவைப் பெறுவதில் அதிக ஆர்வம் இருக்கும்.

குடும்பத் தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். நீங்கள் பெரிய முதலீடுகளைச் செய்யத் திட்டமிட்டால், அதற்கு இது சரியான காலம் அல்ல.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். சிம்ம ராசிக்கு தன யோககர்த்தாவான புதன் இக்காலத்தில் வலுவான நிலையில் உள்ளார். இதனால் பொருளாதார வாழ்க்கை நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து சம்பாதிப்பீர்கள். உங்கள் கடந்த கால முயற்சிகளிலிருந்து லாபம் ஈட்டுவீர்கள்.

இக்காலத்தில் நீங்கள் எதிலும் விரைவாக முடிவெடுப்பீர்கள் மற்றும் உங்கள் எல்லா பணிகளையும் சரியான நேரத்தில் செய்வீர்கள். இக்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புக்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். இக்காலத்தில் செல்வாக்குள்ள நபர்களுடன் நீங்கள் நல்ல தொடர்புகளை ஏற்படுத்துவீர்கள்.

இது உங்கள் தொழில் வாழ்க்கையில் நன்மை பயக்கும் மற்றும் நீங்கள் வெற்றியை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவலையற்றவராக இருப்பதால், இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும், அதிகப்படியான சிந்தனை அல்லது உழைப்பைத் தவிர்க்கவும்.

ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் உங்களை மீறுவீர்கள், இது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும். அரசியல், ஊடகம் மற்றும் விளம்பரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான காலம் இருக்கும். பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டால் இது மிகவும் நல்ல நேரம்.

கன்னி   

கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும்.

அதோடு இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய வாடிக்கையாளர்களை அணுகி உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான காலம் இருக்கும். வருமான உயர்வு பெறலாம்.

இக்காலத்தில் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தொழில் வாழ்க்கைக்காக மேற்கொள்ளும் பயணத்தால் பயனடைவீர்கள்.

முக்கியமாக உங்கள் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதால், பருவகால நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

துலாம்

துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த காலம் அதிர்ஷ்டமாகவும், செழிப்பாகவும் இருக்கும். தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தால் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள்.

பயணம், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையாளர் தொடர்பான சேவைகளில் இருப்பவர்கள் தங்கள் பணியிடத்தில் நன்கு செயல்படுவார்கள் மற்றும் தங்களின் கடின உழைப்பால் ஊக்கத்தொகையையும் பெறலாம்.

குறிப்பாக இக்காலம் கலை, கலாச்சார விஷயங்களைப் பின்தொடர்ந்து வருபவர்களுக்கு ஒரு நல்ல நேரம். அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்திடமிருந்து நல்ல அங்கீகாரமும் ஊக்கமும் கிடைக்கும். நீங்கள் கொஞ்சம் சுயநலமாக இருக்கலாம் மற்றும் உங்கள் விருப்பங்களுக்கும் ஆர்வத்திற்கும் அதிக முன்னுரிமை கொடுப்பீர்கள். சில சட்டவிரோத வளங்களிலிருந்து நீங்கள் சம்பாதிக்கலாம்.

ஆனால் அதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் மூத்த உடன்பிறப்புகளுடன் ஆரோக்கியமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்வீர்கள். மேலும் உங்கள் இலக்குகளை நிறைவேற்ற அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது தொழில் வீடு. ஆகவே இந்த காலத்தில் தொழில் வாழ்க்கையில் சிறிது பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் வேலையை கட்டாயம் மாற்ற வேண்டிய சூழ்நிலையை சந்திக்கலாம்.

நீங்கள் நீண்ட காலமாக வேலையை மாற்ற திட்டமிட்டிருந்தால், உங்கள் நண்பர்களின் உதவியுடன் சில வாய்ப்புக்களைப் பெறலாம். மேலும், தங்கள் வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ள வணிக உரிமையாளர்கள் இந்த காலகட்டத்தில் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும், ஏனெனில் இது ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வல்லது.

பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் பணத்தை இழக்க நேரிடும். எனவே ஊக நடவடிக்கைகளில் முதலீடு செய்யாதீர்கள் அல்லது யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.

காப்பீட்டுத் துறையில் பணிபுரிபவர்கள் நல்ல வாடிக்கையாளர்களை உருவாக்க முடியும் மற்றும் அவர்களின் பணியிடத்தில் நல்ல ஊக்கத்தொகையைப் பெற முடியும்.

தனுசு

தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இக்காலத்தில் வெளிநாட்டு கலாச்சாரத்தை அறிந்து கொள்வதில் நாட்டம் கொண்டிருப்பீர்கள். பல்வேறு இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அறிவைப் பெறவும் அடிக்கடி பயணத்தை மேற்கொள்வீர்கள். இந்த காலகட்டத்தில் மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மேலும் சடங்குகளை அதிகம் மதிப்பீர்கள்.

பணியிடத்தில் சிறந்ததை செய்வீர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான வேலைக்காக அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.

பார்ட்னர்ஷிப் வியாபாரத்தில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் நீங்கள் நிலையான சொத்துக்கள் அல்லது சொத்தில் முதலீடு செய்யலாம். திருமணமானவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் துணையுடன் வலுவான மற்றும் ஆரோக்கியமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்வார்கள்.

மகரம்

மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இந்த காலம் உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக இருக்காது. இக்காலத்தில் சரும அலர்ஜிகள், நரம்பு கோளாறு, சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்படக்கூடும்.

பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெரிய பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக எந்த ஒரு பிரச்சனைக்கும் உடனே மருத்துவரை அணுக அறிவுறுத்தப்படுகிறது. விபத்துக்களுக்கு வாய்ப்புள்ளது என்பதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.

இந்த காலகட்டத்தில் உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் மற்றும் தேவையான முயற்சிகளை விட அதிகமாக முயற்சி செய்ய வேண்டும்.

இருப்பினும், இந்த நேரத்தில் உங்கள் முயற்சிகள் எதிர்காலத்தில் நன்மை பயக்கும். ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் அல்லது உயர்கல்வி படிக்கும் அறிஞர்களுக்கு சாதகமான நேரம்.

கும்பம்

கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். காதல் உறவில் இருப்பவர்களுக்கு சாதகமான காலம். ஏனெனில் காதல் மலரும். இருப்பினும் திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பவர்களுக்கு, திருமணம் தாமதமாகலாம். நிச்சயதார்த்தம் செய்திருந்தால் கூட, சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கும் இந்த நேரம் சாதகமானது. சூதாட்டத்தின் அடிப்படையில் இந்த நேரம் உங்களுக்கு சாதகமானது, ஆனால் அதை பின்பற்ற பரிந்துரைக்கமாட்டோம்.

உங்கள் பணியிடத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள், உங்கள் அதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் லாபம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. இக்காலத்தில் மற்றவர்களின் ஆலோசனைகளை செவி கொடுத்து கேட்பீர்கள்.

மீனம்

மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த காலம் சாதகமானதாக இருக்காது. திருமணமானவர்கள், உறவில் சில வேறுபாடுகள் மற்றும் தவறான புரிதல்களை காணலாம்.

துணையுடனான உறவு சுமூகமாக இருக்க நிதானமாக பேச அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாகவும், சக்தி வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

எனவே பணியிடத்தில் உள்ள அரசியலில் இருந்து சற்று விலகி இருங்கள். இந்த நேரத்தில் நீங்கள் சொத்தில் முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும். மேலும், சந்தையில் இருந்து கடன் வாங்குவதைத் தவிர்க்கவும், ஏனெனில் நீங்கள் அதை திருப்பிச் செலுத்த முடியாது. இக்காலத்தில் உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்துக்கொண்டு கவனமாக செலவழிக்க வேண்டும்.

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம், அதற்காக தியானம் மற்றும் யோகாவை உங்கள் வாழ்க்கை முறையில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

வழக்கு மற்றும் மருத்துவ சேவைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான காலம். ஏனெனில் நீங்கள் உங்கள் தொழிலில் செழிப்பீர்கள். இந்த காலகட்டத்தில் வீடு அல்லது வீட்டு வேலைகளில் சில பெரிய செலவுகள் இருக்கலாம்.   

மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய் வடக்கு, New Jersey, United States

19 Apr, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு அளுத் மாவத்தை, Brampton, Canada

23 Apr, 2020
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, La Plaine-Saint-Denis, France

20 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lincolnshire, United Kingdom

22 Apr, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, மலேசியா, Malaysia, ஜேர்மனி, Germany

22 Apr, 2021
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், கொழும்பு

20 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US