தலையால் முட்டி கோல் அடித்த எர்லிங் ஹாலண்ட்: மான்செஸ்டர் சிட்டி மிரட்டல் வெற்றி
Erling haaland fastest 100 non-penalty goals: ஐப்ஸ்விச் டவுன் அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி பெற்றது.
பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஐப்ஸ்விச் டவுனை வீழ்த்தியது.
பிரீமியர் லீக் போட்டி
மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஐப்ஸ்விச் டவுன் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் போட்டி எத்திஹாட்டில் நடந்தது.
ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் சிட்டி வீரர் பில் ஃபோடென் கோல் அடிக்க, பதிலடியாக டவுன் வீரர் மேடா 21வது நிமிடத்தில் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் 34வது நிமிடத்தில் தலையால் முட்டி அபார கோல் அடித்தார்.
ஹாலண்ட் சாதனை
பின்னர் 69வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் டவுன் வீரர் ஜியான் ஃப்ளெம்மிங் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.
இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 3-2 என்ற கோல் கணக்கில் ஐப்ஸ்விச் டவுன் அணியை வீழ்த்தியது.
பிரீமியர் லீக் வரலாற்றில் பெனால்டி அல்லாமல் 100 கோல்களை வேகமாக அடித்த வீரர் என்ற சாதனையை, இப்போட்டியில் எர்லிங் ஹாலண்ட் படைத்தார்.
