அதிவேகமாக 300 கோல்கள்! மெஸ்ஸிக்கு அடுத்து 26 வயது வீரர் சாதனை
Erling Haaland fastest 300 club goals: கால்பந்து கிளப் போட்டிகளில் மெஸ்ஸிக்கு அடுத்து, அதிவேகமாக 300 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை எர்லிங் ஹாலண்ட் படைத்துள்ளார்.
நார்வேயின் எர்லிங் ஹாலண்ட், கால்பந்து கிளப் போட்டிகளில் மெஸ்ஸிக்கு அடுத்து அதிவேகமாக 300 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
எர்லிங் ஹாலண்ட்
மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வரும் நார்வேயின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland).
26 வயதான எர்லிங் ஹாலண்ட், நேற்று நடந்த பிரீமியர் லீக் தொடரின் கவென்ட்ரி அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்து மான்செஸ்டர் சிட்டியை வெற்றி பெற வைத்தார்.
அவர் அடித்த கோல் கிளப் போட்டிகளில் 300வது கோல் ஆகும். இதன்மூலம் லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்து அதிவேகமாக 300 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஹாலண்ட் படைத்தார்.
165 கோல்கள்
மெஸ்ஸி 365 போட்டிகளில் இந்த சாதனை செய்த நிலையில், ஹாலண்ட் 368 போட்டிகளில் மைல்கல்லினை எட்டியுள்ளார்.
இவர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே (398 போட்டிகள்) உள்ளார்.
எர்லிங் ஹாலண்ட் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக மட்டும் 165 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |