563 குழந்தைகளுக்கு 25 வயது பிரித்தானியரின் பெயரை சூட்டிய பெரு மக்கள்
பெரு நாட்டில் நோர்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்டின் பெயர் 563 குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.
எர்லிங் ஹாலண்ட்
நடப்பு FIFA உலகக்கிண்ணக் கால்பந்து தொடரில், தனது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் எர்லிங் ஹாலண்ட்.
இங்கிலாந்தில் பிறந்த எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) பின்னாளில் நோர்வேக்கு இடம்பெயர, தற்போது அந்நாட்டு அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், தென் அமெரிக்க நாடான பெருவில் எர்லிங் ஹாலண்டின் பெயர் 563 பிறந்த குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.
நெய்மர், மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற வீரர்கள் வரிசையில் 25 வயதாகும் எர்லிங் ஹாலண்டின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லமின் யமால் (Lamine Yamal), ஏற்கனவே 1,241 பெருவியர்களைத் தனது குடும்பப் பெயரை முதல் பெயராக ஏற்றுக்கொள்ளத் தூண்டியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |