விண்வெளி வீரர்கள் எப்படி காபி குடிப்பார்கள்! ஆச்சரியமளிக்கும் வீடியோ இதோ
சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் எப்படி காபி தயார் செய்து குடிப்பார்கள் என்று தெரியுமா?
விண்வெளி வீரர் ஒருவர் காபி குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பயணி மிதக்கும் விண்வெளி கோப்பையில் காபியை ஊற்றினால் என்ன நடக்கிறது என்பதை வீடியோ காட்டுகிறது.
விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர் ஒரு கோப்பை காபி தயார் செய்யும் காட்சியை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) X மூலம் பகிர்ந்துள்ளது.
விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி (Samantha Cristoforetti) காபியை உறையிலிருந்து சிறிய கொள்கலனுக்கு மாற்றுவதுடன் வீடியோ தொடங்குகிறது. ஆனால் அதிலிருந்து காபி குடிக்க முயலும்போது, அது திடமான வடிவத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கோப்பைக்கு காபியை மாற்றிய பின், சிரமமின்றி பருக முடியும். இது விண்வெளிக் கோப்பை என்று அழைக்கப்படுகிறது. விண்வெளி வீரர்கள் காபி குடிப்பதற்காக உருவாக்கப்பட்ட மைக்ரோ கிராவிட்டி கோப்பை இது.
How do you like your coffee?☕️
— ESA (@esa) October 1, 2023
Our astronaut @AstroSamantha demonstrates how she has her morning coffee in space! #InternationalCoffeeDay pic.twitter.com/UKA1Hy0EWW
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆச்சரியமளிக்கும் இந்த விடியோவை அக்டோபர் 1 அன்று X பக்கத்தில் பகிர்ந்துக்ள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
How Astronauts Drink coffee at Space, International Space Station, Zero Gravity, special space cup, Astronaut drinks coffee