11 ஆண்டுகால திருமண வாழ்வை முறிக்கும் தமிழ்ப்பட நடிகை! இணையத்தில் வைரலாகும் அறிக்கை
பிரபல இந்தி நடிகை ஈஷா தியோல் தனது கணவரை விவாகரத்து செய்வதாக இணையத்தில் வெளியான அறிக்கை ஒன்று வைரலாகியுள்ளது.
ஈஷா தியோல்
2004ஆம் ஆண்டில் வெளியான ஆய்த எழுத்து திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஈஷா தியோல்.
தர்மேந்திரா - ஹேமா மாலினி தம்பதியின் மகளான ஈஷா தியோல் இந்தியில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர்.
42 வயதாகும் ஈஷா கடந்த 2012ஆம் ஆண்டில் தொழிலதிபர் பாரத் தக்தானி என்பவரை திருமண செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
பிரிவதாக கூட்டறிக்கை
இந்த நிலையில் ஈஷா தியோல், பாரத் தக்தானி தம்பதி இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
டெல்லி டைம்ஸுக்கு அளித்த இந்த அறிக்கையில், 'நாங்கள் பரஸ்பரம் மற்றும் இணக்கமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் வாழ்க்கையில் இந்த மாற்றத்தின் மூலம், எங்கள் இரண்டு குழந்தைகளின் சிறந்த நலன்கள் மற்றும் எங்கள் நலன் மிகவும் முக்கியம். எங்கள் தனியுரிமை மதிக்கப்படுவதை நாங்கள் பாராட்டுகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |