பிரித்தானியாவின் எசெக்ஸ் கடலில் தத்தளித்த சிலர்: சிறுமியும், பெண்ணும் உயிரிழப்பு
பிரித்தானியாவின் எசெக்ஸ் கடற்கரை பகுதியில் நீரில் மூழ்கி சிறுமியும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானிய கடற்கரையில் சோகம்
புதன்கிழமை மாலை பிரித்தானியாவின் எசெக்ஸ் கடற்கரையில் சிறுமி ஒருவரும், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கடல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோல்செஸ்டர் பகுதிக்கு அருகில் உள்ள வெஸ்ட் மெர்சியா பகுதியில் சிலர் கடலில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிரமாக செயல்பட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்பது எசெக்ஸ் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் இரண்டு பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலில் நிகழ்ந்த இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமானவர்கள் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் சம்பந்தப்பட்ட கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளை சுற்றி பொலிஸார் மற்றும் மருத்துவ சேவை படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |