ரசிகையை கட்டிப்பிடித்த கேப்டன்! 4,00,000 அபராதம், இடைநீக்கம்..வைரல் வீடியோ
இரானிய கோல் கீப்பர் ரசிகை ஒருவரை கட்டிப்பிடித்த காரணத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஈரானிய பிரீமியர் லீக்
கடந்த 12ஆம் திகதி ஈரானிய பிரீமியர் லீக் தொடரில் இஸ்திக்லால் (Esteghlal) மற்றும் அலுமினியம் அரக் (Aluminium Arak) அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
இப்போட்டியில் Gustavo அடித்த கோல் மூலம் இஸ்திக்லால் அணி 1-0 என வெற்றி பெற்றது. போட்டி முடிந்தபோது திடீரென இரண்டு ரசிகைகள் மைதானத்திற்குள் நுழைந்தனர்.
இதனை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுத்தனர். அப்போது இஸ்திக்லால் அணித்தலைவரும், கோல் கீப்பருமான ஹொசைன் ஹொசைனி (Hossein Hosseini) அங்கு வந்தார்.
?? | ¡INSÓLITO! El portero iraní Hossein Hosseini fue suspendido por la Federación de Fútbol de su país, después de que le diera un abrazo a una mujer en un partido de liga: también deberá pagar una multa equivalente a 4.700 dólares.
— Alerta Mundial (@AlertaMundoNews) April 23, 2024
La República Islámica prohíbe que los hombres… pic.twitter.com/W85M0wEPGY
உடனே பெண் ரசிகை அவரை கட்டிப்பிடித்தபோது ஹொசைனியும் அவருக்கு ஆறுதல் கூறினார். பாதுகாப்பு அதிகாரி உடனடியாக ஹொசைன் ஹொசைனியை ஆடை மாற்றும் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
இடைநீக்கம், அபராதம்
இதனைத் தொடர்ந்து ஹொசைனி மீது புகார் எழுந்தது. இதனால் அவர் கலாச்சாரம் மற்றும் ஊடக வழக்குரைஞர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். மேலும் அவர் நீதிமன்றத்திலும் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஊடகங்களின்படி, ''நான் சட்டத்தை மீறவில்லை, பெண் ரசிகருக்கு ஆறுதல் கூற மட்டுமே முயன்றேன்'' என தெரிவித்தார்.
ஆனால், ஹொசைனிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு 4,700 டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம்) அபராதமாக விதிக்கப்பட்டது.
இதற்கு முன்னாள் கோல்கீப்பர் மன்சூர் ரஷிதி கண்டனம் தெரிவித்து, 'கட்டிப்பிடித்தவர் ஒரு இளம் கால்பந்து ரசிகை என்பதால், எந்த சட்டத்தின் கீழ் ஹொசைனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்று கேள்வி எழுப்பினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |