பிரான்சில் காணாமல் போன பிரித்தானிய பெண்! 8 மாதங்கள் கழித்து எலும்புக்கூடாக மீட்பு!

France United Kingdom Spain Human Bones Esther Dingley
By Ragavan Jul 30, 2021 01:10 PM GMT
Report

பிரான்சில் மலை அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் பிரித்தானியாவைச் சேர்ந்த Esther Dingley எனும் மலையேறும் பெண்ணுடையது என்பது உறுதியாகியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Esther Dingley. 37 வயதான இவர் மலையேறுவதை (Hiking) பொழுதுபோக்காக கொண்டவர். இவரது கணவர் Daniel Colegate, ஐவரும் ஒரு மலையேறுபவர்.

எஸ்தர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் - ஸ்பெயின் எல்லையில் உள்ள Puerto de la Galera எனும் இடத்தில் 8,796 அடி உயரம் உள்ள Pico Salvaguardia எனும் பிரபலமான மலையேறும் SummitPost-க்கு தனியாக சென்றுள்ளார்.

பிரான்சில் காணாமல் போன பிரித்தானிய பெண்! 8 மாதங்கள் கழித்து எலும்புக்கூடாக மீட்பு! | Esther Dingley Human Remains Uk France Spain Dna

அங்கு சென்றவர், பிறகு எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் அவரை காணவில்லை என புகார் அளித்தனர்.

பின்பு நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடைசியாக நவம்பர் 22-ஆம் திகதி அங்கு வந்த மற்ற மலையேறும் வீரர்களால் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த வாரம் Pico Salvaguardia மலை அடிவாரத்தில் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அது, எஸ்தரின் எலும்புகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

பிரான்சில் காணாமல் போன பிரித்தானிய பெண்! 8 மாதங்கள் கழித்து எலும்புக்கூடாக மீட்பு! | Esther Dingley Human Remains Uk France Spain Dna

அதனை உறுதி படுத்த, 74 வயதாகும் எஸ்தரின் தாய் Ria Bryant-ன் உடலிலிருந்து DNA மாதிரி எடுக்கப்பட்டு, கிடைக்கப்பெற்ற எலும்புகளில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகளை சோதனைக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று அது எஸ்தர் தான் என்று ஆய்வாளர்களால் உறுதிசெய்யப்பட்டது.

எஸ்தர் மலையிலிருந்து தவறி விழுந்து இறந்து இருக்கலாம், பின்னர் அவரது உடல் பாகங்களை பிரவுன் கரடிகள் மற்றும் ஓநாய்கள் எடுத்துச்சென்று, எலும்புகளை அங்கங்கு போட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பிரான்சில் காணாமல் போன பிரித்தானிய பெண்! 8 மாதங்கள் கழித்து எலும்புக்கூடாக மீட்பு! | Esther Dingley Human Remains Uk France Spain Dna

எஸ்தர் டிங்களே கடைசியாக நவம்பர் 22-ஆம் திகதி Daniel Colegate-க்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில் "பிரான்சின் அழகில் மூழ்கிவிடுவேன் என நினைக்கிறேன். வெனாஸ்குவில் தஞ்சம் அடைய ஒரு குளிர்கால அறை கிடைக்கும் என நம்புகிறேன். எப்போது முடியுமோ அப்பொழுதெல்லாம் பதிவை இடுகிறேன். லவ் யூ XXX” என பதிவிட்டிருந்தார்.

அவரது மரணம் எஸ்தரின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் ஐரோப்பாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US