பிரித்தானியாவுக்கு பயணிப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
பிரித்தானியாவுக்கு பயணிக்கும் சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், இனி முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும்
பிரான்ஸ், அமெரிக்கா, கனடா உட்பட 85 நாடுகளைச் சேர்ந்தவர்கள், இனி முன்கூட்டியே அனுமதி பெறவில்லையென்றால் பிரித்தானியாவுக்குள் நுழையமுடியாது.

இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், Electronic Travel Authorization (ETA) என்னும் அனுமதியை முன்கூட்டியே பெற்றிருக்கவேண்டும்.
இந்த 85 நாடுகளும், visa-exempt nationalities என்னும் வகைப்பாட்டின் கீழ் வரும் நாடுகள், அதாவது, அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், விசா இல்லாமல் பிரித்தானியாவுக்குப் பயணிக்க அனுமதி பெற்றவர்கள் ஆவர்.
பிரித்தானியாவின் புலம்பெயர்தல் அமைப்பை முழுமையாக டிஜிட்டல்மயமாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பிரித்தானியாவின் அதிகாரப்பூர்வ ETA app மூலம் விண்ணப்பிப்பதற்கான கட்டணம், 16 பவுண்டுகள் ஆகும்.

பொதுவாக, சில பயணிகள் திடீர் பயணத்திட்டங்கள் செய்வதுண்டு. ஆனால், இனி அப்படி முடியாது. உங்கள் விண்ணப்பத்தை கூடுதலாக மீளாய்வு செய்ய நேரிடும்பட்சத்தில், மூன்று நாட்களுக்கு முன்பாவது நீங்கள் ETAக்கு விண்ணப்பித்திருக்கவேண்டும்.
இந்த கட்டுப்பாடு, இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் உட்பட, பிரித்தானியா மற்றும் அயர்லாந்துக் குடிமக்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |