மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பறக்கும் ரயிலை அறிமுகம் செய்யவிருக்கும் Etihad
ஐக்கிய அரபு அமீரகம் அதன் போக்குவரத்து அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது, நவீன அதிவேக ரயில் அமைப்பை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
எதிஹாட் ரயில்
அபுதாபியில் நடைபெற்ற உலகளாவிய ரயில் மாநாட்டில், எதிஹாட் ரயில் நிறுவனம் தங்கள் அதிவேக ரயிலின் இறுதி வடிவமைப்பை அறிவித்தது.
மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயிலானது 2026 ஆம் ஆண்டில் வணிக ரீதியாக இயக்கப்படும். குறித்த ரயிலானது 11 முக்கிய நகரங்களை இணைக்கும், பயண நேரத்தைக் குறைக்கும்.
அபுதாபியிலிருந்து துபாய்க்கு 57 நிமிடங்கள் மட்டுமே பயண நேரமாகும். இந்தத் திட்டமானது அடுத்த 50 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 145 பில்லியன் திர்ஹம்களைச் சேர்க்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில்கள் மூன்று தனித்துவமான பயண வகுப்புகளை வழங்க உள்ளது. குடும்பத்துடன் பயணப்படுபவர்களுக்கு என தனிப் பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இணையமூடாக பயணச்சீட்டுகள் பதிவு செய்யும் வசதியுடன், ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் பயணச்சீட்டை பெறும் வசதியும் அறிமுகம் செய்ய உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |