அமெரிக்காவுக்கு மேலும் பதிலடி கொடுக்கலாம்: பிரான்ஸ் அமைச்சர்
பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர், அமெரிக்காவுக்கு மேலும் கூடுதலாக பதிலடி கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
வர்த்தகப்போரில் யாருக்கும் ஆர்வம் இல்லை
வர்த்தகப்போரில் யாருக்கும் ஆர்வம் இல்லை என்று கூறியுள்ள பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சரான பெஞ்சமின் (Benjamin Haddad), என்றாலும், அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் மேலும் கூடுதலாக பதிலடி கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கும் விதித்துள்ள கூடுதல் வரி புதன்கிழமை அமுலுக்கு வந்துள்ளது.
அதனால், ஐரோப்பாவும் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகிவருகிறது.
REUTERS/Gonzalo Fuentes/File photo
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 26 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் வரிகள் விதிக்க இருப்பதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் மேலும் கூடுதலாக பதிலடி கொடுக்கலாம் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சரான பெஞ்சமின்.
உதாரணமாக, டிஜிட்டல் சேவைகள் அல்லது அறிவுசார் சொத்துக்களையும் வரி விதிப்பில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார் பெஞ்சமின்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |