பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு 28 நாள் காலக்கெடு! வெளியான முக்கிய அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் பிரித்தானியாவில் தங்குவதற்கு தேவையான குடியேறிய அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க 28 நாள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 2016 பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பிறகு, பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் European Economic Area (EEA) குடிமக்களுக்கு குடியேறிய அந்தஸ்து அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அந்தஸ்தை பெறுவதின் மூலம் குடியிருப்பு, பயணம், வேலைவாய்ப்பு மற்றும் சுகாதார மற்றும் சலுகைகளுக்கான அணுகல் போன்ற உரிமைகளை ஐரோப்பிய ஒன்றி குடிமக்கள் தக்க வைத்துக் கொள்ளலாம்.
குடியேறிய அந்தஸ்து பெற விண்ணப்பிபதற்கான காலக்கெடு முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் குடியேறிய அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க 28 நாள் காலக்கெடு வழங்கப்படும் என குடிவரவு அமைச்சர் Kevin Foster அறிவித்துள்ளார்.
அதேசமயம், நியாயமான காரணங்கள் இருந்தால் காலவரையறையின்றி அவகாசம் வழங்கப்படும் என Kevin Foster குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக, பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழத்தில் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்கள், குடியேறிய அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க காலவரையறையின்றி அவகாசம் வழங்கப்படும் என Kevin Foster கூறினார்.