Google தோல்வி- 4.1 பில்லியன் யூரோ அபராதம் உறுதி
ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம், வழக்கொன்றில் Google நிறுவனதிற்கு எதிராக தீர்ப்பு வழங்கி, 4.1 பில்லியன் யூரோ அபராதத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அபராதம் முதலில் 2018-இல் விதிக்கப்பட்டது. Google, தனது Android மொபைல் இயக்க முறைமையை பயன்படுத்தி போட்டியாளர்களை வெளியேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பாக, தொலைபேசி உற்பத்தியாளர்களை Google Search, Chrome Browser மற்றும் Play Store-ஐ கட்டாயமாக நிறுவச் செய்தது. இதனால், போட்டியாளர்கள் சந்தையில் இடம் பெற முடியாமல் போனதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்தது.
2022-இல், கீழ்நிலை நீதிமன்றம் அபராதத்தை 4.34 பில்லியனிலிருந்து 4.1 பில்லியனாக குறைத்தது. ஆனால் Google, மீண்டும் மேல்முறையீடு செய்தது. இப்போது, லக்சம்பர்க் நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டை நிராகரித்துள்ளது.
Google நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், “Android திறந்த, இலவச மற்றும் இணக்கமானதாக இருக்க எங்கள் முதலீடுகளை நீதிமன்றம் கவனிக்கவில்லை. 2018-இல் தீர்ப்புக்குப் பிறகு நாங்கள் விதிகளை மாற்றியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
கடந்த 15 ஆண்டுகளில் Google, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து சுமார் 11 பில்லியன் யூரோ அபராதங்களைச் சந்தித்துள்ளது.
Alphabet நிறுவனத்தின் ஆண்டு லாபத்தில் இது 3 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், இந்தத் தீர்ப்பு மற்ற நாடுகளின் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு ஊக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த வழக்கு, மிகப்பெரிய Tech நிறுவனங்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் Digital Markets Act சட்டத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |