பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள முதல் நிபந்தனை
Deal won't take effect unless tuition fees cut agreed - EU officials: ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை பிரித்தானியா குறைத்தால் மட்டுமே இருதரப்புக்கும் இடையிலான ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என ஐரோப்பிய ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானிய பிரதமரும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் இன்று பிரஸ்ஸல்ஸில் சந்தித்த நிலையில், இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியாவுக்கு நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள முதல் நிபந்தனை
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைவது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறார்.

அவ்வகையில், இன்று பிரஸ்ஸல்ஸ் நகரில் பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்னாம், ஐரோப்பிய ஒன்றிய தலைவரான உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவரான அன்றோனியோ கோஸ்டா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இருதரப்பு ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக பிரித்தானிய தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், பின்னணியில் ஒரு பிரச்சினை உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பின்னணியில் ஒரு பெரிய பிரச்சினை
அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான 27 நாடுகளின் மாணவ மாணவியர் பிரித்தானியாவில் கல்வி கற்க வரும்போது, பிரித்தானிய மாணவ மாணவியருக்கு பிரித்தானியா எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறதோ, அதே கட்டணத்தைத்தான் ஐரோப்பிய ஒன்றிய மாணவ மாணவியருக்கும் வசூலிக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய தரப்பு நிபந்தனை வைத்துள்ளதாக, பிபிசி உட்பட பல பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விடயம் என்னவென்றால், பிரித்தானிய கல்வி நிலையங்கள் பிரித்தானிய மாணவ மாணவியருக்கு வசூலிக்கும் கல்விக் கட்டணம், ஆண்டுக்கு 9,790 பவுண்டுகள்.

அதே நேரத்தில், வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரித்தானிய கல்வி நிலையங்கள் வசூலிக்கும் கட்டணமோ ஆண்டுக்கு 38,000 பவுண்டுகள்.
வெளிநாட்டு மாணவ மாணவியர், பிரித்தானிய மாணவ மாணவியரைவிட பல மடங்கு கல்விக்கட்டணம் செலுத்துவதால்தான் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் ஒழுங்காக இயங்கமுடிகிறது என்றும், சொல்லப்போனால், வெளிநாட்டு மாணவ மாணவியர் பெரும் தொகையை கல்விக்கட்டணமாக செலுத்துவதால்தான் உள்ளூர் மாணவர்கள் குறைவான கட்டணத்தில் கல்வி கற்க முடிகிறது என்றும் கூறப்படுவதுண்டு.
அப்படி பிரித்தானிய மாணவ மாணவியருக்கு பிரித்தானியா எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறதோ, அதே கட்டணத்தை மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய மாணவ மாணவியருக்கும் வசூலிக்குமானால், அதனால் பிரித்தானிய கல்வி நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.
ஆக, இந்த விடயம் குறித்து ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.