பிரெக்சிட்டால் தொடரும் தொல்லை... விழி பிதுங்கி நிற்கும் பிரித்தானிய அரசு
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்கின்றன.
பிரித்தானியா உதவி கோரும் நிலையிலும், அதை ஏற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனைகள் விதிப்பதால் விழி பிதுங்கி நிற்கிறது பிரித்தானியா!
நிபந்தனை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அதாவது, பிரெக்சிட்டைத் தொடர்ந்து, பிரித்தானிய ஏற்றுமதியாளர்கள் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது அதற்காக ஏற்றுமதி சுகாதாரச் சான்றிதழ்கள் பெறவேண்டியுள்ளது.
இதனால், காலதாமதம் ஏற்படுவதுடன், செலவும் அதிகரிக்கிறது. ஆகவே, உணவுப்பொருட்கள் ஏற்றுமதியை எளிதாக்கும் வகையில் விதிகளை நெகிழ்த்துமாறு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைக் கோரியுள்ளது.
ஆனால், சம்பந்தமே இல்லாமல், ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
ஆம், உணவுப்பொருட்கள் ஏற்றுமதியை எளிதாக்கும் வகையில் விதிகளை நெகிழ்த்துமாறு கோரிய பிரித்தானியாவிடம், அதிக எண்ணிக்கையிலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலுள்ள இளைஞர்களை பிரித்தானியாவில் வேலை செய்ய அனுமதித்தால் மட்டுமே உணவு ஏற்றுமதி தொடர்பிலான விதிகளை நெகிழ்த்துவோம் என அடம்பிடிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.
இது குறித்து பேசிய ஐரோப்பிய ஒன்றிய தூதரக அதிகாரி ஒருவர், இந்த ஒப்பந்தம் எங்களைவிட பிரித்தானியாவுக்குத்தான் அவசரமாக தேவைப்படுகிறது என்கிறார்.
ஆக, அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயம் அல்ல. 2027ஆம் ஆண்டுக்குள் உணவு ஏற்றுமதி தொடர்பிலான ஒப்பந்தம் நிறைவேற்றப்படவேண்டுமானால், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலுள்ள இளைஞர்களை பிரித்தானியாவில் வேலை செய்ய அனுமதிக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார் அந்த தூதரக அதிகாரி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |