பிரித்தானியர்கள் ஐரோப்பாவில் இனி இதை தடுப்பூசி பாஸ்போர்ட்டாக பயன்படுத்தலாம்! வெளியான அறிவிப்பு
பிரித்தானியாவின் என்.ஹெச்.எஸ் கோவிட் செயலியை ஐரோப்பிய ஒன்றியம் இறுதியாக அங்கிகரீத்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் கண்டம் முழுவதும் பயணிக்க இதை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
. உலகின் பல்வேறு நாடுகளில் இன்னும் கொரோனா பாதிப்பு உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுவிட்டனர்.
அடுத்து மூன்றாவது தடுப்பூசியும் போட்டுக் கொண்டால் நல்லது என்றளவிற்கு வந்துவிட்டது. இதற்கிடையில் பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது, கொரோனாவிற்கான நேர்மறை சோதனைகளை பெற்றவர்களுக்கு NHS Covid pass கொடுக்கப்படுகிறது.
இது இருந்தால் பார்கள், உணவகங்கள் போன்ற இடங்களுக்கு செல்ல அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த NHS Covid pass செயலிக்கு ஐரோப்பிய ஒன்றியம் இறுதியாக அங்கீகரித்துள்ளது.
அதாவது பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பிய கண்டம் முழுவதும் பயணிக்க இதை ஒரு தடுப்பூசி பாஸ்போர்ட்டாக பயன்படுத்தலாம். பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதற்கு முன்பு ஒப்புதல் அளித்திருந்தாலும், ஐரோப்பா முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்தது.
தற்போது இது ஐரோப்பா முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியாவின் NHS Covid pass-ஐ ஏற்றுக் கொள்ள மூன்று மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொண்ட பின் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற 18 நாடுகளில் உள்ள எல்லைகள், பார்கள் மற்றும் உணவகங்களில் தடுப்பூசி போடப்பட்டதை நிரூபிக்க பிரித்தானியா பயணிகள் இனி NHS Covid pass-ஐ பயன்படுத்தலாம்.
வெள்ளிக் கிழமை முதல் அதாவது நாளை முதல் இது அங்கிகரீக்கப்படும் என்று ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம், நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு விடுமுறை கழிக்க செல்பவர்கள் பார்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு போக வேண்டும் என்றால் தினசரி சோதனைகளை எடுக்க வேண்டியதில்லை.
அதே சமயம் ஆஸ்திரியா இந்த NHS பயன்பாட்டை ஏற்கவில்லை. இங்கு மட்டும் தற்போது நடைமுறையில் இருப்பதாகவும், இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை என்பதால், அங்கு செல்பவர்கள் இது குறித்த ஆலோசனைகளை பெறுவதற்கு ஆஸ்திரிய தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.