பிரித்தானியா பிரதமரை மிரட்டவிருக்கும் ஐரோப்பிய தலைவர்கள்! கசிந்த முக்கிய தகவல்
பிரெக்சிட் ஒப்பந்தத்தின் விதிமுகளை மதிக்காவிட்டால் பிரித்தானியா மீது ஐரோப்பா வர்த்தக போரை முன்னெடுக்கும் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மிரட்டல் விடுக்கவுள்ளதாக தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எந்தவித ஆதாரங்களை மேற்கோள் காட்டாமல் தி டைம்ஸ் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் Cornwall-ல் ஜூன் 11-13ம் திகதி வரை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் Yoshihide Suga,பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், இத்தாலி பிரதமர் Mario Draghi,பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மாக்ரோன், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen, ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் Cornwall வந்தடைந்துள்ளனர்.
வடக்கு அயர்லாந்து தொடர்பாக பிரெக்சிட் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை பிரித்தானியா மதிக்க வேண்டும் என்று கோருவதற்காக ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் சனிக்கிழமை போரிஸ் ஜான்சனுடன் சந்திப்பார்கள் என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேசமயம், ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிரட்டல்களை கண்டுக்கொள்ளமாட்டார் என்றும், இந்த மாதம் வடக்கு அயர்லாந்து தொடர்பாக பிரெக்சிட் ஒப்பந்தத்தின் முக்கிய விதிமுறைகளை மீறத் தயாராக இருப்பதாகவும் தெளிவுபடுத்துவார் என்று Downing Street கூறியதாக மேற்கோள்காட்டி தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.