இலங்கையுடன் இணைந்து செயற்படப்போகும் ஐரோப்பிய ஒன்றியம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் H.E.Carmen Moreno தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகளை நேற்று (25) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அண்மைய நடவடிக்கைகளை எடுத்துரைத்த ஜனாதிபதி, இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு அறிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் மேலும் சட்ட அமலாக்க மற்றும் அவசர சேவைகள் பயன்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் உறுதியளித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு முக்கியமான பங்காளியாக உள்ளது, அதன் இரண்டாவது பெரிய ஏற்றுமதி மற்றும் சுற்றுலா சந்தையாகவும், மூன்றாவது பெரிய இறக்குமதி சந்தையாகவும் செயல்படுகிறது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் சந்தை அணுகலை விரிவுபடுத்துதல், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |