ஒற்றைச் சந்தை முறை: பிரித்தானியாவின் திட்டத்தை ஏற்க ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு
பிரித்தானியாவின் ஒற்றைச் சந்தை முறை திட்டத்தை ஏற்க ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவின் திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு
பிரித்தானியாவில் லேபர் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவருவது அனைவரும் அறிந்ததே.
அதாவது, பிரெக்சிட்டால் உருவாகியுள்ள பிரச்சினைகளை சமாளிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவருகிறார் ஸ்டார்மர்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்பதால் பெரிதாக லாபம் இல்லை, நாம் அதிகம் நிதிப் பங்களிப்பு செய்கிறோம், ஆனால், அந்த அளவுக்கு நமக்கு நன்மை கிடப்பதில்லை என்றெல்லாம் பிரித்தானிய தரப்பில் குரல்கள் ஒலிக்கத் துவங்க, கடைசியாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தே பிரித்தானியா வெளியேறியது.
அந்த நிகழ்வு பிரெக்சிட் என அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த பிரெக்சிட்டால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின. கடற்பரப்பில் மீன் பிடிப்பதில் பிரித்தானிய பிரச்சினை ஏற்பட்டது.
இங்கிலாந்திலிருந்து அயர்லாந்துக் குடியரசு வழியாக வட அயர்லாந்துக்கு மாமிசம், சாக்லேட் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதில் பிரச்சினை ஏற்பட்டது.
பிரித்தானிய வாகனங்கள் சரக்குகளுடன் ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.
இந்த பிரச்சினைகள் போதாதென, ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகம் செய்துள்ள Entry Exit திட்டத்தால், பிரித்தானியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் செல்வதற்கு எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆக, பிரெக்சிட்டால், அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் பிரித்தானியா பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகிறது.

ஆகவே, பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவருகிறார்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் இணையும் திட்டம் ஒன்றை பிரித்தானியா முன்வைத்துள்ளது.
ஆனால், பிரித்தானியாவின் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
ஆனால், அப்படி பிரித்தானியாவின் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்க மறுத்துவிட்டதாக வெளியான செய்தியை பிரித்தானிய அரசு வட்டாரங்கள் மறுத்துள்ளன.
அத்துடன், இருதரப்பு உறவுகள் தொடர்பில் ஜூன் மாதம் 13ஆம் திகதி உச்சி மாநாடு ஒன்று நடைபெற இருப்பதாகவும், அதற்கு முன், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையில் இணையும் திட்டம் முதலான பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுவருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |