பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்க ஐரோப்பா தயார்! பிரான்ஸ் பரபரப்பு தகவல்
பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பிரித்தானியாவை இணங்க வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது என பிரான்ஸ் ஐரோப்பிய விவகார அமைச்சர் Clement Beaune தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா 1 வானொலி உடனான நேர்காணலில், பிரித்தானியா ஆதரவுடைய ஜெர்சி தீவு, பிரான்ஸ் மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி மறுத்துள்ளதால் பிரான்ஸ் கடும் கோபமடைந்துள்ளது.
ஏற்கனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் தலைமை பிரெக்சிட் பேச்சுவார்த்தையாளர் Michel Barnier மூலம் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினோம், அந்த ஒப்பந்தம் 100 சதவீதம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
அப்படி அமுல்படுத்தப்படவில்லை என்றால், பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்னும் சில தினங்களில் ஐரோப்பிய ஒன்றியம் அளவில் அல்லது தேசியளவில் நடவடிக்கை எடுப்போம்.
இந்த பிரச்சனை தொடர்பில் நான் நேற்று ஐரோப்பிய நாடுகளின் அமைச்சர்களுடன் பேசிவிட்டேன்.
எங்கள் நலன்களை பாதுகாக்க வெளியுறவுத்துறை மூலம் முடியாத பட்சத்தில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
குறிப்பாக பிரித்தானியா ஐரோப்பா கண்டத்தில் இருந்து பெறும் எரிசக்தி விநியோகத்தை சார்ந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என பிரான்ஸ் ஐரோப்பிய விவகார அமைச்சர் Clement Beaune தெரிவித்துள்ளார்.