தலைமறைவானாரா இளவரசி யூஜெனி... எப்ஸ்டீன் ஆவணத்தில் சிக்கிய பிறகு வெளியானப் புகைப்படம்
எப்ஸ்டீன் விவகாரத்தில் தனது பெற்றோர் சிக்கியுள்ள நிலையில், முதல் முறையாக கத்தாரில் காணப்பட்டுள்ளார் பிரித்தானியா இளவரசி யூஜெனி.
வழக்கத்திற்கு மாறான
இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான 35 வயது யூஜெனி, Hauser & Wirth நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பில் உள்ளார். பத்து நாட்களுக்கு முன்பு எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியிடப்பட்டதிலிருந்து யூஜெனி வெளியே தலைக்காட்டாமல் இருந்தார், ஆனால் மத்திய கிழக்கு நாடொன்றில் பணி நிமித்தமாக பயணப்பட்டுள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

யூஜெனியின் கலைப்படைப்பு ஒன்று இணையத்தில் வெளியான அதே நாளில், உறவினர்களான இளவரசர் வில்லியம் மற்றும் மன்னர் சார்லஸ் ஆகியோர், யூஜெனியின் தந்தையைப் பற்றி அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தும் வகையில், வழக்கத்திற்கு மாறான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
ஆண்ட்ரூ மீதான எந்தவொரு விசாரணையிலும் தானும் பக்கிங்ஹாம் அரண்மனையும் காவல்துறையினருக்கு உதவத் தயாராக இருப்பதாக மன்னர் சார்லஸ் கூறியுள்ளார்.
முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ இங்கிலாந்து அரசாங்கத்தின் வர்த்தக தூதராக இருந்தபோது, தனது நண்பரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசியத் தரவுகளைக் கசியவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தனது மகள்கள் இருவரையும்
இளவரசி யூஜெனி மற்றும் அவரது மூத்த சகோதரி பீட்ரைஸும், அவர்களின் தாயார் மற்றும் தந்தையால் எப்ஸ்டீனின் வட்டாரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக பல்வேறு மின்னஞ்சல்கள் அம்பலமாகியுள்ளது.
சிறார்களை துஸ்பிரயோகத்திற்கு ஈடுபடுத்திய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, சாரா பெர்குசன் தனது மகள்கள் இருவரையும் எப்ஸ்டீனைச் சந்திக்க அழைத்துச் சென்றுள்ளார்.

மட்டுமின்றி, சாரா பெர்குசன் தனது இளைய மகளின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியும் எப்ஸ்டீனிடம் விவாதித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் அவர்களுக்கு ஏற்படுத்திய மிக மோசமான சேதத்தை மீறி, இளவரசிகளான பீட்ரைஸ் மற்றும் யூஜெனி தங்கள் தாயாருக்கு ஆதரவாக செயல்பட முடிவு செய்துள்ளதாகவே தகவல் கசிந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |