யூரோ கால்பந்து! இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக நுழைந்த இத்தாலி: பெனால்டி ஷூட்டில் அபார வெற்றி
யூரோ கால்பந்து தொடருக்கான அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினை வீழ்த்தி, இத்தாலி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், அந்நாட்டு ரசிகர்கள் இதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஐரோப்பிய அணிகள் கலந்து கொள்ளும் 16-வது யூரோ கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பான மற்றும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இதில் லீக் சுற்று, நாக் அவுட் சுற்று அதன் பின் கால் இறுதி சுற்றுகள் முடிந்துவிட்டதால், அரையிறுதி சுற்றுக்கு இத்தாலி மற்றும் ஸ்பெயினும், இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் தகுதி பெற்றன.
இதையடுத்து நேற்று உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, 6-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினை எதிர்கொண்டது. அப்போது ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகள் எவ்வளவு முயற்சித்தும் கோல் அடிக்கவில்லை.
அதன் பின் ஆட்டத்தின் இரண்டாவது பாதியின், 60-வது நிமிடத்தில், இத்தாலி அணியின் பெட்ரிகோ சிய்சா முதல் கோலடிக்க, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா 80-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.
இதனால் ஆட்ட முடிவில் இரு அணிகளும், தலா 1-1 என்று சமநிலை வகித்தன. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆனால் அதிலும் இரு அணிகள் கோல் அடிக்காத காரணத்தினால், வெற்றியாளரை நிர்ணயிப்பதற்கு பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக இத்தாலி நுழைந்தது. மேலும் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் மோதும் மற்றொரு அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது குறிப்ப்டத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022