யூரோ கிண்ணம்... காயங்களால் கடும் நெருக்கடியில் இங்கிலாந்து கால்பந்து அணி
ஜேர்மனியில் யூரோ கிண்ணம் போட்டிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி காயங்கள் காரணமாக நெருக்கடியை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை
ஸ்லோவாக்கியா அணியுடனான போட்டிக்கு முன்னர் இங்கிலாந்து அணி தீவிர பயிற்சியில் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் முக்கிய வீரர்களான Declan Rice மற்றும் Kieran Trippier ஆகியோர் பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை.
இவர்களுடன் Phil Foden பயிற்சியில் இருந்து விடுபட்ட தகவல் வெளியாக, ஆனால் அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதால், அவர் பிரித்தானியா திரும்பியுள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
Rice மற்றும் Trippier இருவரும் பயிற்சியில் களமிறங்கவில்லை என்றாலும், அவர்கள் தனிப்பட்ட பயிற்சிகள் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, Rice-க்கு இணையான வீரரை தெரிவு செய்வதில் Gareth Southgate திணறி வருவதாகவே கூறப்படுகிறது.
ஸ்லோவாக்கியாவை எதிர்கொள்கிறது
இறுதியாக Adam Wharton அல்லது Kobbie Mainoo களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஸ்லோவேனியா அணிக்கு எதிரான போட்டி சமனில் முடிந்த நிலையில் Rice மற்றும் Conor Gallagher ஆகிய இருவரையும் Gareth Southgate தெரிவு செய்துள்ளார்.
ஞாயிறன்று சுற்று 16ல் இங்கிலாந்து அணி ஸ்லோவாக்கியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெல்லும் என்றால் காலிறுதியில் இத்தாலி அல்லது சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்ளும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |