Euro 2024 கால்பந்து போட்டி: மல்லுக்கட்டிய இங்கிலாந்து - ஸ்லோவேனியா அணிகள்
Euro 2024-ன் குரூப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின, இந்த போட்டி 0-0 என்ற சமநிலையில் முடிந்துள்ளது.
இங்கிலாந்து - ஸ்லோவேனியா மோதல்
இன்றைய Euro 2024-ன் குரூப்-C பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்லோவேனியா அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட இங்கிலாந்து அணி, குரூப்பில் முதலிடத்தை தக்கவைக்க இந்த போட்டியின் வெற்றியானது தேவைப்பட்டது.
Let's take a look at England and Slovenia's match stats ?
— Sky Sports Football (@SkyFootball) June 25, 2024
Thoughts? pic.twitter.com/8knhun5Cbs
ஆரோக்ஷமான எதிர்ப்பு ஆட்டத்தை இங்கிலாந்து அணி விடாமல் காட்டியது. இருப்பினும் ஸ்லோவேனியா அணி தங்களது வலுவான தடுப்பு திறனை வெளிக்காட்டி கோல் அடிக்க விடாமல் தடுத்தது.
இதன் காரணமாக முதல் பாதி 0-0 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
சமனில் முடிந்த போட்டி
பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இரண்டாம் பாதியிலும் இதே நிலை நீடித்ததால், இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியாமல் திணறினர்.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல்களுக்காக மாற்று வீரர்களை அடுத்தடுத்து களத்தில் இறக்கினர், ஆனால் அப்போதும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
What's your honest take on this England performance ? pic.twitter.com/kv95bTNxMU
— Thierry Nyann ?? (@nyannthierry) June 25, 2024
இதன்மூலம் குரூப்-C பிரிவில் நடைபெற்ற இன்றைய இங்கிலாந்து-ஸ்லோவேனியா அணிகளுக்கு இடையிலான போட்டி 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
90 நிமிடமும் களத்தில் நின்று 74% வீதத்திற்கும் மேலான பாஸ்களை துல்லியமாக வழங்கிய ஆடம் க்னெஸ்டா செரின்(ADAM GNEZDA ČERIN) ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைப்போல குரூப்-C பிரிவில் நடைபெற்ற டென்மார்க்-செரீபியா இடையிலான மற்றொரு போட்டியும் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
It ends 0-0 in Munich.#EURO2024 | #DENSRB pic.twitter.com/xaWfN7woh1
— UEFA EURO 2024 (@EURO2024) June 25, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |