யூரோ கிண்ணம் இறுதிப் போட்டி... ஐ.எஸ் சதியை முறியடித்த பொலிஸ்
இங்கிலாந்து அணியின் யூரோ கிண்ணம் இறுதிப் போட்டியின் போது ஐ.எஸ் அமைப்பின் பயங்கரவாத சதியை பொலிசார் முறியடித்துள்ளதாக தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஐ.எஸ் அமைப்பின் சதி
போட்டி துவங்குவதற்கும் சில மணி நேரம் முன்னர் பொலிசார் ஐ.எஸ் அமைப்பின் சதியை முறியடித்துள்ளனர் என்றே கூறப்படுகிறது. இங்கிலாந்து ரசிகர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக அறிந்த பொலிசார் துரித நடவடிக்கையால் சதியை முறியடித்துள்ளனர்.
மட்டுமின்றி, தொடர்ச்சியான ஒருங்கிணைந்த சோதனைகளின் போது மூன்று சந்தேக நபர்களை ஜேர்மன் சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் முட்டித்தள்ளிய அந்த இறுதிப் போட்டியை கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
மூவர் சிக்கிய நிலையில்
அலைபேசிகளில் காணப்பட்ட புகைப்படங்களை அடுத்து, மூன்று முகவரிகளில் ஐவரை பொலிசார் தேடியுள்ளனர். இதில் மூவர் சிக்கியுள்ளதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஜேர்மன் பொலிசாரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த இவர்கள் ஐ.எஸ் ஆதரவாளர்கள் என்றே அறியப்பட்டுள்ளனர். மூவர் சிக்கிய நிலையில், ஐ.எஸ் அமைப்பின் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |