Euro 2024: இங்கிலாந்து அணி வெற்றிபெறவேண்டும்... ஜேர்மன் மக்கள் விருப்பம்
Euro கிண்ணம் 2024 கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெறவேண்டும் என ஜேர்மன் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
ஜேர்மனியில் இங்கிலாந்து அணியை வரவேற்க திரண்ட மக்கள்
Euro கிண்ணம் 2024 கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து அணி ஜேர்மனி சென்றடைந்துள்ளது, ஜேர்மனி வந்தடைந்த இங்கிலாந்து வீரர்கள், தங்களுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பால் வியப்பில் ஆழ்ந்தார்கள்.
அணித்தலைவர் Harry Kaneஐக் கண்டதும் ’Harry, Harry, Harry' என சத்தமிட்ட ரசிகர்கள், Jude Bellinghamஇக் கண்டதும் `Belly, Belly, Belly' என உற்சாகக் கூக்குரல் எழுப்பினார்கள்.
Kaneஐக் காண வெகு தொலைவிலிருந்து பயணித்து வந்த ரசிகைகளில் Monica Weil (28) ம் ஒருவர். Kane எனது ராஜா, எனது legend என வாய்க்கு வாய் ஓயாமல் புகழும் Monica, அவர் இருந்தால் போதும், இங்கிலாந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிறார்.
இங்கிலாந்து அணியைக் காண வந்த புலம்பெயர்ந்தோர்
சிரியா நாட்டவர்களான புலம்பெயர்ந்தோர் சிலர், இங்கிலாந்து கொடியைக் கையில் வைத்துக்கொண்டு இங்கிலாந்து அணியைக் கண்டதும் கொடியை வேக வேகமாக ஆட்டுகிறார்கள்.
Kane இங்கிருக்கிறாரா, என்னால் நம்பவே முடியவில்லை என்கிறார் ஒருவர்.
துரிங்கியாவிலுள்ள Erfurt என்னுமிடத்திலிருந்து இங்கிலாந்து அணியை வரவேற்க குடும்பத்துடன் வந்துள்ள Jackie Williams (47) என்பவர், ஜேர்மனி அணி சமீப காலமாக முன்னேறி வருகிறது, ஆனாலும் இங்கிலாந்து அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஜேர்மனி வெல்ல ஆசைதான், ஆனாலும், அதற்கு அடுத்து எனக்கு விருப்பமான அணி இங்கிலாந்துதான் என்கிறார்.
இப்படி ஜேர்மன் மக்களிடையே தங்களுக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு நம்பமுடியாமல் திகைத்து நின்ற இங்கிலாந்து வீரர்கள், அவர்களைப் பார்த்து பதிலுக்கு கைகளை அசைத்தும், தம்ப்ஸ் அப் சைகை வாட்டியும் தங்களுக்கு அவர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |