Euro 2024: வரலாறு படைத்த இளம் வீரர்! பிரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின்
UEFA யூரோ 2024 அரையிறுதியில், பிரான்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் அணி.
போட்டி தொடங்கி 8வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியில் முதல் கோல் விழுந்தது.
அந்த கோலை கைலியின் எம்பப்பே (Kylian Mbappe) அசிஸ்ட் செய்ய ராண்டல் கொலோ முவாணி (Randal Kolo Muani) அடித்தார்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காதபடி, இப்போட்டியில் ஸ்பெயின் அணிக்காக 16 வயதான (16 ஆண்டு 362 நாட்கள்) லாமின் யமல் (Lamine Yamal) முதல் கோலை அடித்து அசத்தினார்.
இதன்மூலம், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் கோல் அடித்த இளைய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
போட்டி தொடங்கி 21-வது நிமிடத்தில் லாமின் யமல் தனது அணிக்காக முதல் கோலை அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, அடுத்த நான்கு நிமிடங்களில் (25-வது நிமிடத்தில்) ஸ்பெயின் அணி இரண்டாவது கோலை அடித்து முன்னிலை வகித்தது.
இந்த இரண்டாவது கோலை டேனி ஒல்மோ (Dani Olmo) அடித்தார். இந்த கோல் தான் ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதை தீர்மானித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UEFA European Football Championship 2024, UEFA Euro 2024, Spain, Lamine Yamal First Goal, Kylian Mbappe, France, Spain reaches Euro 2024 finals