Euro 2024: ஜேர்மனியில் கால்பந்து ரசிகர்கள் பார்ட்டியில் தாக்குதல் நடத்தியரை சுட்டுக்கொன்ற பொலிசார்
ஜேர்மனியில், Euro 2024 கால்பந்தாட்டப் போட்டிகள் துவங்கியுள்ளதைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட பார்ட்டியில் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தினார்.
ரசிகர்கள் பார்ட்டியில் தாக்குதல்
ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்திலுள்ள Wolmirstedt என்னுமிடத்தில், Euro 2024 கால்பந்தாட்டப் போட்டிகள் துவங்கியுள்ளதைக் கொண்டாடுவதற்காக, நேற்று பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அப்போது திடீரென ஒருவர் பார்ட்டியில் கலந்துகொண்டவர்களை கத்தியால் தாக்கத் துவங்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள், அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து பொலிசார் அங்கு செல்ல, தாக்குதல்தாரி பொலிசாரை நோக்கி ஓடிவந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிஸ் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |