யூரோ கிண்ண கால்பந்து தொடரின் மொத்த பரிசுத்தொகை 3,000 கோடி! முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் மொத்த பரிசுத்தொகை விவரம் குறித்து இங்கே காண்போம்.
யூரோ கிண்ணம் 2024 கால்பந்து தொடர் (UEFA Euro) தொடங்கியுள்ளது. ஜேர்மனியில் நடைபெறும் இந்தத் தொடரில் 24 அணிகள் பங்கேற்கின்றன.
முதல் போட்டியில் ஜேர்மனி அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தி தனது கணக்கை தொடங்கியுள்ளது.
இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகை 331 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 3,000 கோடி) ஆகும்.
கிண்ணத்தை வென்று சாம்பியன் ஆகும் அணிக்கு 8 மில்லியன் யூரோவும் (72 கோடி), இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 5 மில்லியன் யூரோவும் (44 கோடி) பரிசாக வழங்கப்படும்.
பெரிய வெற்றி, ஐரோப்பிய சாம்பியன்ஷிப்புக்கு செல்கிறோம்! 2 கோல்கள் அடித்து உற்சாகமாக பதிவிட்ட ரொனால்டோ
பரிசு விபரம்:
- அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் - 4 மில்லியன் யூரோ (36 கோடி)
- காலிறுதி தகுதிபெறும் அணிகள் - 2.5 மில்லியன் யூரோ (22 கோடியே 38 லட்சம்)
- ரவுண்ட் ஆஃப் 16 - 1.5 மில்லியன் யூரோ (13 கோடியே 43 லட்சம்)
- குரூப் ஸ்டேஜ் டிரா - 500,000 (4 கோடியே 47 லட்சம்)
- குரூப் ஸ்டேஜ் வெற்றி - 1 மில்லியன் யூரோ ( 9 கோடி)
- ஒவ்வொரு அணிக்கும் போட்டி கட்டணம் - 9.25 மில்லியன் யூரோ (83 கோடி)
நடப்பு யூரோ கால்பந்து தொடரின் பரிசுத்தொகையானது, 2022க்கான மகளிர் யூரோ 2022யின் பரிசுத்தொகையை விட 20 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |