யூரோ கிண்ணம் 2024: இங்கிலாந்து வெல்லுமா? ஆரூடம் கூறியுள்ள பெண்மணி
யூரோ கிண்ணம் 2024 போட்டிகளில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி கிண்ணத்தை வெல்லுமா என ஆரூடம் கூறும் ஒரு பெண்ணிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் பாஸிட்டிவான பதில் ஒன்றைக்கூறியுள்ளார்.
Image: Getty Images
யூரோ கிண்ணத்தை இங்கிலாந்து வெல்லுமா?
58 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024ஆம் ஆண்டு யூரோ கிண்ணத்தை இங்கிலாந்து வெல்லும் என்று கூறியுள்ளார் ஆரூடம் கூறும் பெண்மணியான ஜெமிமா (Jemima Packington, 67) என்னும் பெண்மணி.
Image: SWNS
பிரெக்சிட், மகாராணியாரின் மறைவு மற்றும் ராஜ குடும்பத்திலிருந்து ஹரி வெளியேறுவது போன்ற விடயங்களை சரியாக கணித்தவர் ஜெமிமா.
அவரிடம் இங்கிலாந்து அணி யூரோ கிண்ணத்தை வெல்லுமா என கேள்வி எழுப்பப்பட்டபோது, தனக்கு மூன்று வார்த்தைகள் மீண்டும் மீண்டும் கேட்பதாக தெரிவித்துள்ளார் ஜெமிமா.
Image: AP/REX/Shutterstock
‘It’s Coming Home’, அதாவது கிண்ணம் நாட்டுக்கு திரும்புகிறது என்ற வார்த்தைகள் தன் காதில் ஒலித்துக்கொண்டே இருப்பதாக கூறும் ஜெமிமா, ஆகவே, இங்கிலாந்து ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |