யூரோ கால்பந்து! ஜேர்மனியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து: நேரில் சென்று உற்சாகப்படுத்திய அரச குடும்பத்தினர்
யூரோ கால்பந்து தொடரின், ஜேர்மனிக்கு எதிரான நாக் அவுட் ஆட்டத்தில், இங்கிலாந்து 2-0 என்று வெற்றி பெற்று, கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஐரோப்பாவில் பல நாடுகளில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. அதன் படி 2-வது சுற்றின் இன்றைய ஆட்டம் இங்கிலாந்தின் Wembley மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதல் பாதியில் எந்த ஒரு அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் Raheem Sterling ஒரு அற்புதமான கோல் அடிக்க, ஆட்டம் முடிவதற்கு 4 நிமிடங்களே இருந்த போது, 86-வது நிமிடத்தில், இங்கிலாந்து அணியின் கேப்டன் Harry Kane கோல் அடிக்க, இறுதியாக இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த போட்டியில், இங்கிலாந்து ரசிகர்கள் சுமார் 40,000 பேர் கூடியிருந்தனர்.
அவர்களின் கரோசத்தால், அந்த மைதானமே அதிர்ந்தது. அதுமட்டுமின்றி பிரித்தானிய அரச குடும்பத்தினரான, வில்லியம், காட் மிடில்டன் மற்றும் அவரது மகன் ஜார்ஜ் ஆகியோர் மைதானத்திற்கு வந்து நேரடியாக போட்டியை கண்டுகளித்து உற்சாகப்படுத்தினர்.
மேலும், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், போட்டியின் இடையே தன்னுடைய மனைவியுடன் இந்த கால்பந்து போட்டியை பார்க்கும் புகைப்படத்தை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Come on England! ??????? pic.twitter.com/9p1VbE4OCQ
— Boris Johnson (@BorisJohnson) June 29, 2021