Euro 2024 கால்பந்து: பெல்ஜியம் அணியை வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி
Euro 2024 கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதல்
Euro 2024 கால்பந்து தொடரில் சூப்பர் 16 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
A massive moment for France ?#EURO2024 | #FRABEL pic.twitter.com/5WAmx8sDN5
— UEFA EURO 2024 (@EURO2024) July 1, 2024
இருப்பினும் இரு அணிகளாலும் கோல் இலக்கை அடைய முடியாததால் முதல் பாதி 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
பிரான்ஸ் வெற்றி
சூப்பர் 16 சுற்று என்பதால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் இரண்டாம் பாதியில் களமிறங்கின.
இறுதியில் ஆட்டத்தின் 85 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ஜான் வெர்டோங்கன்(JAN VERTONGHEN) கோல் அடித்து அசத்தினார்.
பதிலுக்கு கோல் அடிக்க பெல்ஜியம் அணி மிகப்பெரிய அளவில் முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை.
இதனால் ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி சூப்பர் 16 சுற்றில் வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |