Euro 2024-ன் கால்பந்து: சூப்பர் 16ல் சுற்றில் ஜேர்மனி அபார வெற்றி
Euro 2024-ன் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டென்மார்க் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜேர்மனி அணி வெற்றி பெற்றுள்ளது.
சமனில் முடிந்த முதல் பாதி
Euro 2024-ன் கால்பந்து தொடரின் சூப்பர் 16 சுற்றில் ஜேர்மனி மற்றும் டென்மார்க் அணிகள் மோதின.
இரு அணிகளும் கோல் அடிப்பதில் ஆர்வம் காட்டிய நிலையில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் போனதால் முதல் பாதி சமனில் நீடித்தது.
அதிரடியில் இறங்கிய ஜேர்மனி
இதையடுத்து தொடங்கிய 2வது பாதியின் 53 வது நிமிடத்தில் ஜேர்மனியின் KAI HAVERTZ முதல் கோலை அடித்து அசத்தினார்.
டென்மார்க் அணியின் பெரும் முயற்சிக்கு பிறகும் பதில் கோலை அடிக்க முடியவில்லை.

அதே சமயம் ஜேர்மனியின் JAMAL MUSIALA ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து ஜேர்மன் அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றார்.

இறுதியில் ஜேர்மனி அணி 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
Your support tonight ???#DFB #GermanFootball #GermanMNT #EURO2024 #GERDEN
— German Football (@DFB_Team_EN) June 29, 2024
? DFB/ Philipp Reinhard pic.twitter.com/gsrS0Utduy
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |