Euro 2024 கால்பந்து: சூப்பர் 16 சுற்றில் கோல் மழை பொழிந்த நெதர்லாந்து: வெளியேறிய ருமேனியா
Euro 2024 கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் ருமேனியா அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
ருமேனியா - நெதர்லாந்து அணிகள் மோதல்
Euro 2024 கால்பந்து தொடரில் சூப்பர் 16 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் ருமேனியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 20 வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் Gakpo முதல் கோல் அடித்து ஆட்டத்தை பரபரப்படைய செய்தார்.
இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க ருமேனியா அணி முயற்சி செய்தும் முதல் பாதி 0-1 என்ற கணக்கில் நெதர்லாந்துக்கு சாதகமாக அமைந்தது.
பட்டைய கிளப்பிய நெதர்லாந்து
சிறிய இடைவெளிக்கு பிறகு தொடங்கிய இரண்டாம் பாதியில் இரு அணிகளுக்கும் இடையே சரியான போட்டி நீடித்தது.
ஆனால் ஆட்டத்தின் 81 வது நிமிடத்தில் ருமேனியாவின் தடுப்புகளை தாண்டி நெதர்லாந்து அணியின் Malen 2 வது கோலை அடித்தார்.
Malen ?#EURO2024 | #ROUNED pic.twitter.com/onoFhkcEA1
— UEFA EURO 2024 (@EURO2024) July 2, 2024
கிட்டத்தட்ட நெதர்லாந்தின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆட்டத்தில் கூடுதலாக 4 நிமிடம் சேர்க்கப்பட்டது.
அப்போது 93 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் Malen அணிக்கான 3வது கோலையும் அடித்து அசத்தினார்.
?? Oranje secure a place in the last eight! #EURO2024 | #ROUNED pic.twitter.com/4eBD0KzQ9P
— UEFA EURO 2024 (@EURO2024) July 2, 2024
இதன் மூலம் சூப்பர் 16 சுற்றில் ருமேனியா அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |