Euro 2024 கால்பந்து: பெனால்டி கோல் வரை சென்ற போர்ச்சுக்கல் - ஸ்லோவேனியா போட்டி
Euro 2024 கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஸ்லோவேனியா அணியை பெனால்டி கோல் முறையில் 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றுள்ளது.
போர்ச்சுக்கல் - ஸ்லோவேனியா
Euro 2024 கால்பந்து தொடரில் சூப்பர் 16 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின.
ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இரண்டாவது பாதியிலும் இரு அணிகளாலும் கோல் கணக்கை தொடங்க முடியாததால் போட்டி முடிவு தெரியாமல் இரு அணி ரசிகர்களும் குழப்பமடைந்தனர்.
இதையடுத்து போட்டியில் கூடுதல் நேரம் சேர்க்கப்பட்டு போட்டி தொடரப்பட்டது. இருப்பினும் இரு அணிகளாலும் கோல் கணக்கை தொடங்க முடியவில்லை.
கூடுதலாக கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் சேர்க்கப்பட்ட நிலையிலும் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 0-0 என்ற சமனில் இருந்தனர்.
பெனால்டி வாய்ப்பு
இந்நிலையில் போட்டியின் முடிவுயை நிர்ணயிப்பதற்கான பெனால்டி கோல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
Ronaldo x Diogo Costa ❤️#EURO2024 | #PORSVN pic.twitter.com/yzI7kAjCSf
— UEFA EURO 2024 (@EURO2024) July 1, 2024
இதில் முதல் வாய்ப்பு ஸ்லோவேனியா அணியின் JOSIP ILIČIĆ-க்கு வழங்கப்பட்டது, ஆனால் அதனை அவர் கோலாக மாற்ற தவறவிட்டார்.
இதையடுத்து போர்ச்சுக்கல் அணி சார்பாக அனுப்பப்பட்ட நடசத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணி சார்பில் முதல் கோலை அடித்தார்.
பெனால்டி வாய்ப்பு முறையில் ஸ்லோவேனியா அணிக்கு வழங்கப்பட்ட 3 வாய்ப்புகளும் தோல்வியில் முடிந்தது.
Portugal are through to the last eight! ??#EURO2024 | #PORSVN pic.twitter.com/6LXlRlG6hr
— UEFA EURO 2024 (@EURO2024) July 1, 2024
அதே சமயம் போர்ச்சுகல் அணி வழங்கப்பட்ட 3 வாய்ப்புகளையும் கோலாக மாற்றி வெற்றியை உறுதிப்படுத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |