Euro 2024 கால்பந்து: கோல் மழை பொழிந்த ஸ்பெயின் வீரர்கள்!
Euro 2024 கால்பந்து தொடரின் சூப்பர் 16 சுற்றின் இன்றைய போட்டியில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்பெயின் - ஜார்ஜியா
Euro 2024 கால்பந்து தொடரின் சூப்பர் 16 சுற்றில் ஸ்பெயின் மற்றும் ஜார்ஜியா அணிகள் இன்று மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியின் 18வது நிமிடத்தில் ஜார்ஜியா அணி வீரர் Le Normand கோல் அடித்து அமர்களப்படுத்தினார்.
இதற்கு பதிலடியாக ஸ்பெயின் அணியின் Rodri ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில் முதல்பாதி நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தனர்.
அடுத்தடுத்து பாய்ந்த கோல்கள்
ஸ்பெயின் அணி வீரர் Fabian Ruiz இரண்டாம் பாதி தொடங்கியதுமே கோல்(51) அடித்து போட்டியை விறுவிறுப்புடையதாக மாற்றினார்.
These two running the wings... ?#EURO2024 | #ESPGEO pic.twitter.com/MjIky5rA7L
— UEFA EURO 2024 (@EURO2024) June 30, 2024
இதனை தொடர்ந்து ஸ்பெயின் அணியின் Willams 75வது நிமிடத்திலும், Olmo 83வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.
இதன் மூலம் இறுதியில் ஆட்ட நேர முடிவில் ஜார்ஜியா அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி Euro 2024 கால்பந்து தொடரின் சூப்பர் 16 சுற்றில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |