Euro 2024 கால்பந்து: சூப்பர் 16ல் ஆஸ்திரியா வீழ்த்தி துருக்கி அபார வெற்றி
Euro 2024 கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரியா அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி துருக்கி அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரியா - துருக்கி மோதல்
Euro 2024 கால்பந்து தொடரில் சூப்பர் 16 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 1 வது நிமிடத்திலேயே துருக்கி அணி வீரர் Merih Demiral முதல் கோல் அடித்து ஆட்டத்தை பரபரப்படைய செய்தார்.
முதல் பாதி முடியும் வரை ஆஸ்திரியா அணியால் பதில் கோலை அடிக்க முடியாததால் 0-1 என்ற கோல் கணக்கில் துருக்கி அணி முன்னிலை வகித்தது.
விறுவிறுப்படைந்த 2ம் பாதி
துருக்கி அணியின் மற்றொரு வீரர் Salih Ozcan இரண்டாம் பாதியின் 59வது நிமிடத்தில் 2வது கோலை துருக்கி அணி சார்பாக அடித்து அசத்தினார்.
இதன் மூலம் துருக்கி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து ஆக்ரோஷமாக விளையாடிய ஆஸ்திரியா அணி 66வது நிமிடத்தில் தங்களது முதல் கோலை அடித்தது.
இந்த கோலை ஆஸ்திரிய அணியின் Gregoritsch அடித்தார்.
What a way to end the round of 16 ?#EURO2024 pic.twitter.com/JUS2URWl0y
— UEFA EURO 2024 (@EURO2024) July 2, 2024
இறுதியில் ஆட்ட நேர முடிவில் சூப்பர் 16 சுற்றில் ஆஸ்திரியா அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி துருக்கி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |